ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் எகிறியது பூக்கள் விலை.!!

கோவை : ஆயுதபூஜையை யொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து கோவை பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:- பண்டிகை காலத்தை முன்னிட்டு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தேவை காரணமாக பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. மல்லிகை கிலோ ரு 1200 முல்லை கிலோ ரு 800 செவ்வந்தி ரூ 200, ரோஜா ரூ 300 ,அரளி ரூ.400,சம்பங்கி ரூ200 காக்கடை ரூ 600, நந்தியாவட்டை ரூ. 250 கனகாம்பரம் ரு 150, கோழி பூ 100, அவல் ரூ.120 ,வேர்க்கடலை ரூ. 120 ,தாமரை பூ ஒன்று ரூ.20 ,மருகு ஒரு கட்டு ரூ.20 மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ 50 மா இலை ஒரு கட்டு ரூ 30, அருகம்புல் ஒரு கட்டு ரூ 10 ,வாழை இலை ஒன்று ரூ 10 வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ. 20 ,பொரி ஒரு பக்கா ரூ 30 ,பொரி ஒரு படி 120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செவ்வந்திப் பூவரத்து அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூவிலை குறைந்துள்ளது. இன்று ( செவ்வாய்க்கிழமை) பூ விற்பனைஅதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே விலை உயர்வும் தவிர்க்க முடியாதது. இவ்வாறு வியாபாரிகள் கூறினார்கள்.