விபத்து ஏற்படுத்தும் குழிகள், வேகத்தடைகளை சரி செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

குடிநீர் குழாய்க்காக சாலையில் தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால், கடந்த வாரம் காவல்துறை பெண் ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார். கோவை நகரம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாததால், நாள்தோறும் சாலை விபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கோவை முழுவதும் உள்ள சாலைகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சாலை விபத்துகளை குறைக்க, நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், சாலை பாதுகாப்பு குறித்த தகவல்களை அறிவிக்க வேண்டும். விபத்து ஏற்படும் வகையில் உள்ள குழிகள், வேகத்தடைகள், ரோட்டின் ஓரங்களை சரிசெய்ய வேண்டும், விபத்து பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். பஸ்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் உத்தரவிட்டுள்ளார்.