நகையை பறிக்க முயன்ற திருடன் – மடக்கிப் பிடித்த சிங்கபெண்.!!

கோவை அருகே உள்ள வடவள்ளி, மருதபுரம், நஞ்சப்பர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராணி (வயது 55 )கணவர் செல்வராஜ் அங்குள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராணி தினமும் உணவு எடுத்துச் சென்று கொடுத்து வருவது வழக்கம் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராணி உணவு எடுத்துக் கொண்டு வடவள்ளி, கோல்டன் நகர் பகுதியில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த வாலிபர் ஒருவர் அவரது அருகில் சென்று கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட ராணி நகையை இறுக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார் .சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் தப்ப முயன்றார் ஆனால் ராணி அந்த வாலிபரை மடக்கி பிடித்து கொண்டார்..அந்த வாலிபருக்கு .பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் இடையர்பாளையம் ஜெ. ஜெ.. நகர். நேரு வீதியை சேர்ந்த தனுஷ் குமார் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.