கோவை சின்னவேடம்பட்டி,ஏரிப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மனைவி சித்ரா ( வயது 47) இவர் நேற்று மாலை சின்ன வேடம்பட்டியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கலந்த 30 கிராம் செயினை பறித்தான். சித்ரா அந்த ஆசாமியுடன் போராடி 16 கிராம் நகையை இறுக பிடித்துக் கொண்டார். மீதமுள்ள 14 கிராம் நகையை அந்த ஆசாமி கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து சித்ரா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்பால சதீஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.
நடைப்பயிற்சி செய்த பெண்ணிடம் தங்க நகை பறிப்பு..!
