கோவை ஒண்டிப்புதூர், நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் . (வயது 57 )இவர் நேற்று மாலையில் இருசக்கர வாகனத்தில் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 ஆசாமிகள் ரங்கராஜ் மனைவி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்.பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற மனைவியிடம் செயின் பறிப்பு..!
