கோவை ரயிலை கவிழ்க்க சதி – 6 பேர் கைது.!!

கோவை : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காரைக்காலில் இருந்து ஏராளமான பயணிகளுடன் புறப்பட்டது .அந்த ரயில் கடந்த 22- ‘ஆம் தேதி அதிகாலை 12 -45 மணிக்கு கோவை அருகே வந்து கொண்டிருந்தது. இருகூரிலிருந்து சிங்காநல்லூர் ரயில் நிலையத்துக்கு இடையே வந்த போது தண்டவாளத்தில் பெரிய அளவிலான மரக்கட்டைகள் வைக்கப்பட்டு இருந்தது அதை கவனித்த இன்ஜின் டிரைவர் அதன் அருகே வந்ததும் கட்டையை அகற்றிவிட்டு ரயிலை இயக்கினார் .இதனால் அந்த ரயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை பின்னர் அந்த ரயில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்ததும் டிரைவர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இதை யடுத்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் தண்டவாளத்தில் வைத்திருந்த அந்தமரக்கட்டைகளையும் கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 6 இளைஞர்கள் அந்த வழியாக நடந்து சென்றது தெரியவந்தது உடனே போலீசார் அந்த இளைஞர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த 6 பேரும் சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிபுதூர் பகுதியில் சுற்றி திரிந்ததை கண்டுபிடித்தனர். உடனே அந்த 6 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர் . இதில் அவர்கள் கோவை ஒண்டிபுதூரைச் சேர்ந்த தினேஷ் (வயது 25) கோகுலகிருஷ்ணன் ( வயது 24) வினோத் என்கிற சதீஷ்குமார் ( வயது 19 )கார்த்திக் ( வயது 23 ) உக்கடம் புல்லுக்காடு நாகராஜ் ( வயது 19) சேலம் மாவட்டம் கே .மோரூர் அம்பேத்கர் கால னி யை சேர்ந்த வேதவள் ( வயது 22) என்பது தெரிய வந்தது .மது அருந்த தண்டவாளத்தின் அருகே சென்ற போது பெரிய அளவிலான மரக்கட்டையை வைத்து ரயிலை கவிழ்க்கசதி செய்தது தெரிய வந்தது .இதையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர்.. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ?இவர்களுக்கு வேறு ஏதாவது வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.