சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்தவர் சேது. இவரது மகன் ராம் ( வயது 26 )இவர் பீளமேடு சித்ரா பூங்கா நகர் பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது பேக்கிரிக்கு பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி காபி சாப்பிட வருவார்கள்.இதனால் அந்த மாணவர்களுடன் ராம் சகஜமாக பழகி வந்தார். இந்த நிலையில் ராம் கடந்த 23ஆம் தேதி சித்ரா சௌபாக்கிய நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த ஒரு மாணவர் ராமிடம் ஏன்? என்னை முறைத்து பார்க்கிறாய் என்று கூறி வீண் தகராறு செய்தாராம் . இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது .இந்த நிலையில் அந்த மாணவர் சக மாணவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வரவழைத்து ராமை அரிவாளால் வெட்டினார்களாம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ராம் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் ஹரி, கருப்பு, ரிச்சர்ட், நித்யானந்தம் உட்பட 6 பேரை இன்று கைது செய்தார் .இவர்கள் மீது 4பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
பேக்கரி அதிபருக்கு அரிவாள் வெட்டு… கல்லூரி மாணவர்கள் 6 பேர் வழக்குப்பதிவு..!
