ஆயுஷ்மான் பாரத் திட்டம்… இந்தியா பொது சுகாதாரத்தில் ஒரு புரட்சியை காண்கிறது- பிரதமர் மோடி பெருமிதம்.!

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டம் பொது சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் ஏழைகள் , 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ரூ.5லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம்.

இந்த திட்டத்தின் 7வது ஆண்டையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ”நாம் ஆயுஷ்மான் பாரத்தின் 7 ஆண்டுகளை கொண்டாடுகிறோம். இது எதிர்காலத் தேவைகளை எதிர்பார்த்து, மக்களுக்கு உயர்தர மற்றும் குறைந்த கட்டணத்தில் சுகாதார பராமரிப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் ஒரு முயற்சியாகும். இந்த திட்டத்தினால் இந்தியா பொது சுகாதாரத்தில் ஒரு புரட்சியை காண்கிறது. இது நிதிப்பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்துள்ளது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.