நெல்லை: சர்ச்சைக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில், தற்போது இஸ்லாமிய மாணவிகள் தங்கி படிக்கும் மாணவிகள் விடுதியில் பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை அருகே பாளையில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் தங்கும் விடுதியில், 9ம் வகுப்பு படித்து வரும் மாணவியில் பாலியல் சேட்டை செய்து வந்த, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த விடுதி காப்பாளர் (வார்டன்) அபுபக்கர் என்பவரும், அவருக்கு உடந்தையாக இருந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண் உதவி காப்பாளார் வகிதாவும் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியானது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கு இஸ்லாமிய மாணவிகள் தங்கிப் பயின்று வருவதற்காக விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை மாணவிகள் பலர் தங்கியிருந்து அருகே உள்ள பள்ளிகளுக்கு சென்று பயின்று வகின்றனர்.
இந்த நிலையில், தங்கியிருந்து ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த சிறுமிக்கு, அந்த விடுதியின் காப்பாளர் அபூபக்கர் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி விடுதியின் மற்றொரு பெண் காப்பாளர் வகிதாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரோ இதுகுறித்து யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது எனத் தெரிவித்ததுடன், அவர் கூறியபடி நடந்துகொள் என்று அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் தரப்பில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், பாலியல் தொல்லை தொடர்பாக அங்குள்ள மாணவிகள் விசாரணை நடத்தினர். அதில், அபுபக்கர் மாணவிகளிடம் பாலியல் பல பெண் குழந்தைகளிடம் சேட்டையில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து, விடுதி வார்டனான அபூபக்கர் மற்றும் உதவி வார்டன் வகிதா ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இநத் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.