கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா நேற்று உக்கடம் – பேரூர்பைபாஸ் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள பூங்கா அருகேநின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பேரூர் தெலுங்குபாளையம் பிரதீப் மகன் பிரவீன் ( வயது 24 )என்பது தெரிய வந்தது.
இதேபோல ரத்தினபுரி போலீஸ்இன்ஸ்பெக்டர் பாதுஷா நேற்றுகண்ணப்ப நகர் சுடுகாட்டு பகுதியில்ரோந்து சென்றார் அப்போது அங்கு கஞ்சா விற்றதாக சிவானந்தா காலனி, கல்கி வீதியை சேர்ந்த சுதாகர் (வயது 27) என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து 1 கிலோ 745 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதேபோல சுந்தராபுரம், போலீசார் அங்குள்ள எல்.ஐ.சி .காலனி பகுதியில் நடத்திய சோதனையில் சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த சரண் (வயது 25)கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.