மாநகராட்சி பூங்காவில் சந்தன மரம் கடத்தல் – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை கணபதி ,காந்திமா நகர் பகுதியில் மாநகராட்சி சொந்தமான பூங்கா உள்ளது.இங்கு ஏராளமான மரங்கள் உள்ளன.சந்தன மரங்களும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் யாரோ மர்ம நபர்கள் பூங்காவில் புகுந்து அங்கிருந்தத 5 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர்.இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.