கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இந்த கோவிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது .நேற்று உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 14 பொது உண்டியல்களில் ரூ.66 லட்சத்து 74 ஆயிரத்து 866 வசூல் ஆனது .இது தவிர தங்கம் 88 கிராமும் ,வெள்ளி 5 கிலோ 356 கிராமமும், பித்தளை 23 கிலோ 100 கிராம் இருந்தது .உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்..
மருதமலை முருகன் கோவிலில் ரூ.66 லட்சம் உண்டியல் காணிக்கை.!!
