கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது . இந்த பள்ளியில் 608 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று வழக்கமாக பள்ளி திறக்கப்பட்டது .பள்ளி வளாகத்திற்குள் வந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் திடீரென விஷத்தன்மை கொண்ட சாணி பவுடரை தண்ணீரில் கரைத்துக் குடித்தனர். மேலும் இது குறித்து அங்கிருந்த சக மாணவ – மாணவிகளிடம் கூறினார்கள் .இதை அறிந்த ஆசிரியர்கள் பதறி அடித்துக் கொண்டு வந்து சம்பந்தப்பட்ட 3 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கஞ்சம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தகவலின் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விஷம் குடித்த 3 மாணவிகளும் கடந்த 18.ஆம் தேதி பள்ளிக்கு வெளியே ஆண் நண்பர்களான தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த ஆசிரியை ஒருவர் அதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது .மேலும் அந்த மாணவிகளை அழைத்து நல்வழிப்படுத்தும் நோக்கில் அறிவுரை வழங்கினார்.. தேவையில்லாத பழக்கங்களை விட்டுவிட வேண்டும் இல்லை எனில் பெற்றோர்களிடம் கூறி விடுவேன் உங்கள் டி.சி.யை கை வைத்தால் வேறு பள்ளிக்கூடத்தில் படிக்க முடியாது என்று மிரட்டியுள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்து விடுமோ ? ஆசிரியை சொல்லிவிடுவாரோ? என்ன அச்சத்தில் மாணவிகள் இருந்தனர். விரக்தியில் இருந்த அவர்கள் நேற்று பள்ளிக்கு வந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதற்கிடையில் அந்த மாணவியின் பெற்றோர் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். மேலும் மாணவிகள் தவறு செய்தால் பெற்றோரை அழைத்து கூற வேண்டும். ஆனால் நீங்கள் எப்படி முடிவு எடுக்கலாம்? என்று அவர்கள் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .மேலும் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஒருவர் சப் கலெக்ட்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் ஆஸ்பத்திரிக்கு சென்று மகளிடம் விசாரித்தேன். அப்போது பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் எங்களை திட்டியும் எங்கேயும் படிக்க விடாமல் செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறினார் .என் மகளை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியஆசிரியை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அரசு பள்ளியில் ஆசிரியை திட்டிய விரக்தியில் 3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..
ஆசிரியை திட்டியதால் அரசு பள்ளிக்கூடத்திலேயே 3 மாணவிகள் சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி..
