24 ஆண்டுகளில்… ஒரு நாள் கூட லீவு எடுக்காத ஒரே பிரதமர் இவர்தான்..!!

கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காதவர் என பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம். இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு நிமிர்ந்து நிற்கும் வகையில் முதுகெலும்பைக் கொடுத்தவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் திரு மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், சுமார் 390 பொருட்கள் மீதான வரி குறைப்புகள் இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் அடங்கும். உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், வீட்டு கட்டுமான பொருட்கள், வாகனங்கள், வேளாண்மை, சேவைகள், பொம்மைகள், விளையாட்டுகள், கைவினைப் பொருட்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட துறைகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், அவர்களது சேமிப்பையும் அதிகரிக்கும்.

தற்சார்பு இந்தியா என்ற உறுதிப்பாட்டை அடைவதில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்துமாறும், தன்னிறைவு அடைவதற்கு அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் எவ்வாறு ஆற்றல் சேர்க்கும் என்றும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது பிரதமர் குறிப்பிட்டார். வேளாண்மை, சுகாதாரம், ஜவுளி மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் இழைகள் உள்ளிட்ட துறைகளில் ஜிஎஸ்டி வரிகளைக் குறைப்பதன் மூலம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் வாயிலாக நடுத்தர பிரிவினருக்கான வாய்ப்புகளை அதிகரித்து அவர்கள் தொடர்ந்து சேமிக்க, மோடி அரசு வழிவகை செய்த வருவதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு சேவை புரியும் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு சிறந்த உதாரணமாக அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் விளங்குகின்றன. கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காதவர் என பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம். இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு நிமிர்ந்து நிற்கும் வகையில் முதுகெலும்பைக் கொடுத்தவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.