கோவை வீட்டு வசதி வாரிய அதிகாரி தற்கொலை..

மதுரை மாவட்டம் ,வாடி பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56) கோவையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கோவை பீளமேடு ஹட்கோ காலணி ஹவுசிங் யூனிட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மதுரையில் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் கண்ணன் நேற்று தனது மனைவியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார் அப்போது இன்னும் சிறிது நேரத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். உடனே அவரது மனைவி இது குறித்து கோவையில் உள்ள தனது உறவினர் ஜெய கார்த்திக்கிடம் கூறி நேரில் சென்று பார்க்கச் சொன்னார். அதன்படி அவர் கண்ணன் வீட்டுக்கு சென்றார் .கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றபோது கண்ணன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து பீளமேடுபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை..