மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் ஜிந்தா ஒஸ்மான் (வயது 28) இவருக்கு கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இக்பால் (வயது 54 )என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் இக்பால் தனக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும், அவர்கள் மூலம், அரசு வேலை வாங்கி தருவதாக ஜிந்தா ஓஸ்மானிடம் தெரிவித்தார். மேலும் வேலைக்காக இக்பால் ரூ.2 லட்சத்து 36, ஆயிரம் கேட்டார் . இதனால் கடந்த ஆண்டு ஜிந்தா ஓஸ்மான் கோவைக்கு வந்து உக்கடம் பஸ் நிலையம் பகுதியில் வைத்து அவர் கேட்ட பணத்தை கொடுத்தார் .ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை . இதனால் ஜிந்தா ஒஸ்மான் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் அவர் தொடர்ந்து பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார் . இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இக்பாலை தேடி வருகிறார்கள்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.36 லட்சம் மோசடி.!!
