டாஸ்மாக் கடை அருகே தரையில் புதைத்து வைத்து மதுபாட்டில்கள் விற்பனை – 3 பேர் கைது..!

கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் நேற்று விளாங்குறிச்சி,காட்டு கடை டாஸ்மாக் கடை ( எண் 1564) பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது கடையை மூடிய பிறகு கள்ள சந்தையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 410 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் | ஆவுடையார் கோவில் அரசூரைச் சேர்ந்த விக்னேஷ் ( வயது 30) திருச்சி மாவட்டம் முருகா புரியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி ( வயது 30) புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் கவியரசன் ( வயது 24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆவுடையார் கோவிலை சேர்ந்த இளங்கோ என்பவர் தப்பி ஓடிவிட்டார். இவரை தேடி வருகிறார்கள்.