கோவை : மண்டல அளவிலான உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் கோவை மாவட்டம் மதுக்கரை.துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைப்பெற்றது.
இதில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:-
பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்கார்த்திகேயன் முதலிடம் பிடித்தார். இன்சாஸ் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் முதலிடம் பிடித்தார்.
மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குள் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில்;
பிஸ்டல் பிரிவில் முதலிடத்தை கோவை 4-ம் அணி உதவித் தளவாய் .பூபதியும், 2-ம் இடத்தை உதவி ஆணையர் அஜய் தங்கம் ,3-ம் இடத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் ஆகியோரும் பிடித்தனர். இன்சஸ் பிரிவில 1-ஆம் இடத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரனும், 2-ம் இடத்தை கோவை நான்காம் அணி உதவி தளவாய் பூபதியும், 3-ம் இடத்தை துணை காவல் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணனும் பிடித்தனர்.
இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி.!!
