ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை..

ரஷ்யாவின் தூரக் கிழக்கு காம்சட்கா தீபகற்பத்தின் கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

ரஷ்ய சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், வீடுகளில் உள்ள பொருட்களும், மின்விளக்குகளும் ஆடுவதும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று முன்னும் பின்னும் அசைவதும் வீடியோவாக பதிவாகியிருந்தது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, காம்சட்கா தீபகற்பத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கிக்கு கிழக்கே 128 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில், 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

ரஷ்யாவின் அரசு புவி இயற்பியல் சேவையின் உள்ளூர் கிளை, இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை 7.4 எனக் குறைத்து மதிப்பிட்டது. பின்னர் அதை 7.8 ரிக்டர் ஆக நிறுத்தியது. அத்துடன், குறைந்தது ஐந்து பின் அதிர்வுகளையும் பதிவு செய்தது.

அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. இன்று அதிகாலை 2.30 மணி சமயத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இனி கூடுதல் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது சேதங்கள் குறித்த எந்த தகவலும் இல்லை. அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது என்று அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

காம்சட்கா தீபகற்பம், பசிபிக் பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றியுள்ள ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் ஒரு புவித்தட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இது நில அதிர்வு செயல்பாடுகளுக்கு பெயர் பெற்ற பகுதியாகும்.

கடந்த ஜூலையில், இதே பிராந்தியத்தின் கடலோரப் பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான ஒரு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட சுனாமி, ஒரு கடலோர கிராமத்தின் ஒரு பகுதியை கடலுக்குள் இழுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ரிங் ஆப் ஃபயர்: பசிபிக் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில்தான் இந்த பகுதி உள்ளது. இதே இடத்தில்தான் ஜப்பான் அமைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஏற்படுவது வழக்கம். ரஷ்யா, ஜப்பான் இரண்டும் அதிகமாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுவது இதனால்தான். இங்கு செசிமிக் செயல்பாடு அதிகம் இருப்பதால் எளிதாக நிலநடுக்கம் ஏற்படும். இதன் காரணமாக அடிக்கடி ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

முன்னதாக ஜப்பானில் 2011 மார்ச் 11ம் தேதி நிலநடுக்கம் காரணமாக பேரழிவு ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. அதை தொடர்ந்து அங்கு சுனாமி ஏற்பட்டது. இப்போது 13 வருடங்கள் கழித்து மீண்டும் மார்ச் மாதத்தில் அதே புகுஷிமா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புகுஷிமாவில் சுனாமி அலைகள் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது .. இதன் காரணமாக 40.5 மீட்டர் உயரம் வரை அங்கு அலைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வடக்கு Honshu பகுதிதான் இந்த சுனாமி காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். தற்போது இதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.