கோவை ஆர் .எஸ் .புரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து நேற்று சுண்டப்பாளையம் ரோடு, பி.எம். சாமி காலனி சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் இடையர்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்த முருகபூபதி ( வயது 38 )என்பது தெரிய வந்தது. இவரிடமிருந்து 400 கிராம் கஞ்சாவும் கஞ்சா விற்ற பணம் ரூ.7000 பறிமுதல் செய்யப்பட்டது .
இதே போல காந்தி பார்க் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் கஞ்சா விற்றதாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பரேஷ் பும்ஜி ( வயது 29 )சுஜன் தாஸ் (வயது 50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 530 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..