இன்று கோவை வந்தார் நடிகர் சரத்குமார்..!

கோவை : பிரபல சினிமா நடிகரும்,பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான ஆர்.சரத்குமார் இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.விமான நிலையத்தில் அவரை உபைதுர் ரகுமான் பாஜக பிரமுகர்கள் வி.ஆர்.வேலு மயில், சரத் சக்தி, முத்துப்பாண்டி,பால்ராஜ் ,பொன்னுசாமி மற்றும் பலர் வரவேற்றனர்.பின்னர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லீ மெரிடியன் ஒட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் அவிநாசிஅருகே உள்ள வஞ்சிபாளையத்தில் தனது நண்பர்களுடன் அவர் புதிதாக தொடங்கியுள்ள தண்ணீரிலிருந்து சமையல் வாயு தயாரிக்கும் “HONC கேஸ் பிரைவேட் லிமிடெட்” தொழிற்சாலைக்கு சென்றார். அந்த நிறுவனத்தில் நடிகர் சரத்குமார் நிர்வாக இயக்குனராக உள்ளார். அங்கு தண்ணீரில் இருந்து சமையல் வாயு தயாரிக்கும் முறையை செய்தியாளர்களுக்கு விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் நிறுவனர் முதன்மை விஞ்ஞானி பியூலர் ராமலிங்கம், நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், இணை இயக்குனர் பூரண சங்கீதா, தலைமை நிர்வாக அதிகாரி (சி இ ஒ )முத்துக்குமாரசாமி முத்து ரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.