தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார்.
சென்னையில் நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனித்துவமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அவர், தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார். அவரது மரணம் திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.