பூஜை செய்யும் போது வேட்டியில் தீப்பிடித்து முதியவர் உடல் கருகி பரிதாப பலி..

கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க், 2-வது கிராசில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்.சாந்தராமன் ( வயது 75) சம்பவத்தன்று இவர் வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் கொளுத்தி சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது கற்பூரம் தவறி விழுந்து வேட்டியில் தீப்பிடித்தது. இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மாலை இறந்தார். இது குறித்து அவரது மகன் ரிஷிகேஷ் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.