கோவை போத்தனூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் . இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் . இவரும் அதே கல்லூரியில் படித்துவரும் ஈச்சனாரியை சேர்ந்த ராகுல் சக்ரவர்த்தி ( வயது 20 ) என்ற மாணவரும் நட்பாக பழகினார்கள் .பின்னர் அது காதலாக மாறியது .இதனால் 2 பேரும் தினமும் செல்போனில் நீண்ட நேரம் பேசி தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். அவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது .இதனால் அவர்கள் தங்கள் மகளை கண்டித்துடன் ராகுல் சக்ரவர்த்தியுடன் பேசக்கூடாது என்று கூறினார். இந்த நிலையில் ராகுல் சக்ரவர்த்தியின் நடவடிக்கை அந்த மாணவிக்கு பிடிக்காமல் போனது. இதனால் அவர் ராகுல் சக்ரவர்த்தியிடம் செல்போனில் பேசுவதையும் நேரில் பார்ப்பதையும் தவிர்த்தார் .பலமுறை அவர் அந்த கல்லூரி மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டும் பேசவில்லை. இதனால் ராகுல் சக்ரவர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தனது காதலியை நேரில் சந்தித்து கேட்க வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவி தான் படித்து வரும் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ராகுல் சக்ரவர்த்தி அந்த கல்லூரி மாணவியை தடுத்து நிறுத்தி ஏன் ?தன்னிடம் பேசுவதில்லை . எதனால் என்னை வெறுக்கிறாய்? என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது .இதில்ஆத்திரமடைந்த ராகுல் சக்ரவர்த்தி அந்த மாணவியை நடுரோட்டில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது .அதன் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை தாக்கிய ராகுல் சக்ர வர்த்தியை நேற்று கைது செய்தனர்.
காதலிக்க மறுத்த மாணவி… நடுரோட்டில் தாக்கிய கல்லூரி மாணவர்.!!
