மாணவர்கள் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை..!

கோவை : போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கோவை சரவணம்பட்டி பகுதியில்போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
துடியலூர் ரோடு, சரவணம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் விடுதிகள்,கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள அறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.. இதில் போதைப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.