முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “அண்ணா கூறிய மறப்போம், மன்னிப்போம் என்ற அருமொழியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிமுக ஒன்றிணைவு குறித்து புரிய வேண்டியவர்களுக்கு இது ஒரு எண்ணமாக புரியட்டும்” என தனது எண்ணத்தைத் தெளிவுபடுத்தினார்.
மேலும் அவர் கூறியதாவது, “தொண்டர்களின் மனசாட்சியும், பொதுமக்களின் உணர்வுகளும் தான் என் கருத்துகளுக்கு அடிப்படை. அதிமுக ஓரே கட்சியாக திரும்ப வேண்டும் என்பது என் நேர்மையான நோக்கம். எதிர்கால அரசியல் பயணத்தில் வெற்றி பெற ஒற்றுமை மிக முக்கியம். புரிய வேண்டியவர்களுக்கு புரியும்… – செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதற்கான வழியை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார். செங்கோட்டையனின் இந்த கருத்து, அதிமுகவின் உள்நிலை நிலவரத்தில் புதிய சிந்தனைகளை ஏற்படுத்தியுள்ளது.