அண்ணாமலை விலகலின் பின்னணி… துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சொன்ன தகவல் .!

மிழக பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வந்த அண்ணாமலை அண்மையில் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

அந்த நாள் முதல் தற்போது வரை, அண்ணாமலைக்கு பாஜகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் உள்ளது. இதனிடையே, அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. அதிலும், மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதற்கான பின்னணி தொடர்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியுள்ளார். அவர் என்ன தெரிவித்துள்ளார் என்பதை விரிவாக பார்க்கலாம். தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் இருந்து வந்த பாஜக தற்போது 4 தொகுதிகளில் காலூன்றி உள்ளது. மேலும், தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக வளர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
இதில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததார். மேலும், மித மிஞ்சிய வேகத்தில் அவர் செயல்பட்டார் என்பதே அவரது பதவி நீக்கத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு களத்தில் இறங்கி அதிக அளவில் வேலை பார்க்க வேண்டியதை பாஜக தலைமை உணர்ந்துள்ளது. இதில், அண்ணாமலை தனது நலனுக்காக செய்திருந்தாலும் கட்சியின் நலனுக்காக செய்திருந்தாலும் அது தவறாகி விட்டது. தமிழ்நாட்டில் ஒரு முக்கிய சக்தியாக பாஜக மாறிவிட வேண்டும் என்பதை செயல் திட்டமாகும்.
தமிழக பாஜக மாநில தலைவர் பதவி விவகாரத்தில் பாஜக தலைமை சரியான முடிவு எடுத்துள்ளது. பாஜக தலைமையின் உத்தரவுக்கு அண்ணாமலையும் உடன்பட்டார் என்று நினைக்கிறேன். இந்த விவகாரத்தில் அவருக்கு அதிருப்தி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கட்சி தலைமையின் யுக்தியை அண்ணாமலை புரிந்து கொண்டுள்ளார். பாஜகவுக்கு 2026 சட்டமன்ற தேர்தல் இலக்கு கிடையாது என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது: பொதுவாகவே குருமூர்த்தி தன் மனதில் பட்டதை உடைத்துப் பேசக்கூடிய மனநிலை கொண்டவர். அவரது பார்வை மற்றும் கருத்துக்களில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலையின் மித வேகத்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டதால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. இதில், அதிமுக பாஜக இடையே உடன்பாடு ஏற்பட்டு போட்டியிட்டு இருந்தால் ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். இது பிரதமர் மோடிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. இந்த எண்ணம் பாஜகவின் மூத்த தலைவர்கள் மத்தியில் உள்ளது.

ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு முக்கியமல்ல என்று கூறுவது முக்கியமான நிகழ்வாகும். திமுக ஆட்சியை வீழ்த்துவது ஒன்று தான் பாஜகவின் இலக்கு என்று அந்தக் கட்சியினர் கூறி வரும் நிலையில், இந்த தேர்தல் முக்கியமில்லை என்று கூறுவது அதிமுகவுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்த தேர்தலை அதிமுக பெரிதும் எதிர்பார்த்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறி வருகிறார். இதில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்கு பாஜகவுக்கு ஆர்வம் இல்லை என்ற சந்தேகம் எழும். பாஜகவுக்கு மாநில தேர்தல் முக்கியமல்ல 2029 மக்களவைத் தேர்தல் தான் முக்கியம் என்ற எண்ணம் பாஜகவின் மேல் மட்டத்தில் இருப்பதாக குருமூர்த்தி உடைத்து பேசியதாக தோன்றுகிறது என்று தெரிவித்தார்.