கோவை சொக்கம்புதூர், ஜீவா பாதையை சேர்ந்தவர் சங்கர் (வயது 56) இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த “பல்சர் ” பைக்கை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து சங்கர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவொளி நகர் பாரதியார் சதுக்கத்தத்தை சேர்ந்த டேவிட் (வயது 30) பச்சாபாளையம் காந்தி காலனி சேர்ந்த அஜித்குமார் (வயது 27) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பைக் மீட்கப்பட்டது.
பல்சர் பைக் திருட்டு – 2 வாலிபர்கள் கைது..!
