தொழிலாளிகள் இருவர் தற்கொலை..

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் ,மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 65 ) பெயிண்டிங்வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவர் மன அழுத்தம் காரணமாக நேற்று அப்பநாயக்கன்பாளையம், சபரி கார்டன் பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சௌந்தர்ராஜ் ( வயது 31) இவர் கோவை பீளமேடு, ராஜ் நாயுடு லேஅவுட்டில் தங்கி இருந்து பாரம் தூக்கம் தொழில் செய்து வந்தார்.இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒருவிபத்தில் முதுகு வலி ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவர் தங்கி இருந்த வீட்டின் விட்டத்தில் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ..இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..