கோவை துடியலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று துடியலூர், ராக்கிபாளையம் ,ஏ .கே .எஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்குதடை செய்யப்பட்ட சாணி பவுடர் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த ஜெய்னாதீன் (வயது 50) கைது செய்யப்பட்டார் பின்னர் .அவர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பெட்டிகடையில் சாணி பவுடர் விற்பனை – வியாபாரி கைது.!
