சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8000 சதுர அடியில் திறந்த வெளி கலையரங்கம் மாணவிகளின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் அபெக்ஸ் நிறுவன உரிமையாளர் வணங்காமுடி அவர்களிடம் சி எஸ் ஆர் நிதியிலிருந்து மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கும் கலை, இளகிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் மேடைகளுடன் கூடிய கலையரங்கம் அமைத்துதர எஸ்.ஆர். எஸ் நினைவ அறக்கட்டளை தலைவர் மன்னவன், இனிதா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக எஸ் ஆர் எஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும் அப்ளக்ஸ் நிறுவன உரிமையாளருமான வணங்காமுடி அவர்களிடம் எடுத்துக் கூறி பள்ளி பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி அடைந்ததற்காகவும், ஆசிரியர்களையும், மாணவிகளையும் பாராட்டுகின்ற வகைகளும் பள்ளிக்கு 8000 சதுர அடியில் ஒலிபெருக்கி, மின்விளக்கு, மின்விசிறி உடன் கூடிய திறந்த வெளி கலையரங்கமும், சுமார் 1000 சதுர அடியில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட மேடையும்,
6வகுப்பறைகள், மற்றும் அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றின் தரைத்தளங்களுக்கு டைல்ஸ் வசதியும், கழிப்பறை சுவர்களுக்கு டைல்ஸ் மற்றும் 3 பகுதி வகுப்பறைகளுக்கு மேற்கூரை மறுசீரமைப்பு, பள்ளியின் பழைய கட்டிடங்களுக்கு சுமார் 50,000 சதுரஅடி வர்ணம் பூசுதல் வேலைகள் சுமார் 75 லட்சம் மதிப்பீட்டில் நிதி வழங்கி வேலைகள் நடந்து முடிவு பெற்றுள்ளது.
இந்த அரங்கம் மாணவிகளுக்கு கலையரங்கமாக மட்டுமல்லாமல் , கூட்டு வகுப்புகள், யோகா நிகழ்ச்சிகள் நடத்த , மதிய உணவு அருந்த என பல்முக நிகழ்வுகளுக்கு பயன்பாடாக உள்ளது.
பள்ளியில் நடைபெறும் பணிகளை பார்வையிட வந்த வணங்காமுடி அவர்கள் ஆசிரியர்கள், மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்துவிட்டு பள்ளியை நடைபெற்று வரும் பணிகள் மற்றும் தேவைகளை பார்வையிட்டார்.
அப்போது 12 ம் வகுப்பு மாணவிகள் . முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகப்போகும் மாணவிகளை பற்றி கேட்டபோது ஏராளமானோர் கையை உயர்த்தினர் அப்பொழுது அவர்
பெண்கள் கல்வி கற்றால் அந்த சமுதாயமே உயரும் என்பதை வலியுறுத்தினார். மாணவிகள் அப்பொழுது எங்கள் குடும்பத்திற்கும் இந்த சமூகத்துக்கும் பயனுள்ள சிறந்த மாணவிகளாக எங்கள் பங்கினை அளிப்போம் என்று உறுதி அளித்தனர். இக்கலையரங்கத்தை உஷா வணங்காமுடி அவர்கள் திறப்பு விழா செய்து பள்ளி மற்றும் மாணவிகளின் பயன்பாட்டுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் எஸ் ஆர் எஸ் அறக்கட்டளை தலைவர் த. மன்னவன், பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், இனிதா குமார், அமரர் எஸ். ஆர். எஸ் அவர்களின் உடன்பிறப்புகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பேரூராட்சி தலைவர் அமரர் எஸ். எஸ். பொன்முடி, அப்பெக்ஸ் நிறுவனர் எஸ். எஸ். வணங்காமுடி குடும்பத்தினர், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அபெக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசும் மாணவிகளுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.