கோவை அருகே உள்ள சூலூர் ,கலங்கல்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜெயா ( வயது 50)குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தஇவரது உறவினர்கள் தாமரைக்கண்ணன், அப்பாவு ,,சுரேஷ், அமுலு, வேல்முருகன் சரோஜா.இவர்களுக்கிடையே நகை -பணம் பரிமாற்றம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெயா வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றிருந்தார் .அப்போது அங்கு வந்த அந்த 6 பேரும் சேர்ந்து ஜெயாவை தகாத வார்த்தைகளால் பேசி, காலால் மிதித்து, செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்களாம் இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் ஜெயா புகார் செய்தார்.போலீசார் தாமரைக்கண்ணன், அப்பாவு,சுரேஷ், அம்முலு வேல்முருகன் சரோஜா ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.இதேபோல குனியமுத்தூர் பி .கே . புதூர் ஸ்ரீநகர் காலனி சேர்ந்த சரோஜா ( வயது 50) வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அந்த புகாரில் தன்னை சிவராஜ் உட்பட 6 பேர் தாக்கியதாக கூறியுள்ளார் இது தொடர்பாக சிவராஜ் ,பூபதி, லைலா சபரி . ,குமுதா , ஜெயா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
வடவள்ளி காவல் நிலையம் முன் கோஷ்டி மோதல் – பெண்கள் உள்பட 12 பேர் மீது வழக்குபதிவு ..!
