கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று மலுமிச்சம்பட்டி பிரிவு அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சாரதி பெஹ்ரா மகன் சந்திப் குமார் பெஹ்ரா(வயது22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த லத்தீப் மொல்லா மகன் மதியார் ரஹ்மான் மொல்லா (வயது26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
16 கிலோ கஞ்சா கடத்தல் – மேற்கு வங்க வாலிபர்கள் கைது..!
