டிரம்புக்கு Bye … கைகோர்க்கும் இந்தியா – சீனா… மோடி பகிரங்க அறிவிப்பு..!

டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சீண்டும் வகையில் பேசி உள்ளார்.

தற்போது உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இதனை சரிசெய்ய இரண்டு பெரிய பொருளாதார நாடான இந்தியாவும், சீனாவும் சேர்ந்து செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். 5 ஆண்டுகள் கழித்து நாளை மறுநாள் சீனா செல்லும் பிரதமர் மோடி அதற்கு முன்பாக இப்படி கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. அதோடு அமெரிக்காவை கைகழுவி சீனாவுடன் சேர்ந்து செயல்பட இந்தியா தயாரானதன் முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இன்றும், நாளையும் பிரதமர் மோடி ஜப்பானில் இருப்பார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் வர்த்தகம், நிதி பங்களிப்பு, முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார். ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி, நேரடியாக சீனா செல்கிறார்.

சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சீனா சென்று அந்த மாநாட்டில் பங்கேற்ற உள்ளார். மொத்தம் 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்ற உள்ளனர்.

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திக்க வாய்ப்புள்ளது. ரஷ்யா, சீனா, இந்தியவை குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீண்டி வரும் நிலையில் இந்த சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் உக்ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகைளை விதித்துள்ளது. அதேபோல் நம் நாட்டையும், சீனாவையும் வரி போட்டு டிரம்ப் சீண்டுகிறார். இதில் சீனாவுக்கு சில சலுகைகளை டிரம்ப் வழங்கினாலும் சீனாவை எதிரியாக அமெரிக்கா வரையறை செய்து வைத்துள்ளது. இதனால் டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் சீனாவை சீண்டலாம்.

இதனால் சீனாவும், நம் நாடும் பகையை மறந்து செயல்பட முன்வந்துள்ளது. நம் நாடும், சீனாவும் எதிரும், புதிருமாக இருந்த நிலையில் டிரம்பின் வரியால் ஒன்றாக கைகோர்த்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை பிரச்சனையில் இருநாடுகளின் வீரர்கள் மோதிக்கொண்டனர்.

இதில் இருநாடுகளின் வீரர்களும் பலியாகினர். இதையடுத்து சீனா உடனான உறவு துண்டிக்கப்பட்டது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – சீனா உறவு மேம்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஜப்பானில் உள்ள பிரதமர் மோடி அந்த நாட்டின் Yomiuri Shimbun என்ற நாளிதழுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சீண்டும் வகையில் இந்தியா – சீனாவின் உறவின் முக்கியத்துவம் பற்றி கூறினார். அந்த பேட்டியில் பிரதமர் மோடி, ‘ உலகப் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் நிலையற்ற தன்மை நிலவுகிறது.

இதனை கருத்தில் கொண்டு இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியாவும் சீனாவும் உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டு வர ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்” என்றார். இதன்மூலம் சீனாவுடன் சேர்ந்து செயல்படுவது உறுதி என்பதை மோடி உணர்த்தி உள்ளார். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பெரும் அதிர்ச்சியாக அமைகிறது.

மேலும் பிரதமர் மோடி கூறும்போது, ”பரஸ்பர மரியாதை, பரஸ்பர ஆர்வம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை நீண்ட எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முன்னேற்றவும், வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்வதற்கான தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும் இந்தியா தயாராக இருக்கிறோம்.

இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையேயான நிலையான, இணக்கமான இருதரப்பு உறவுகள் என்பது பிராந்தியம் மட்டுமின்றி உலகளவில் அமைதியான நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது ஆசிய பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும் முக்கியமானதாக இருக்கும்” என்றார்.

அமெரிக்காவை எடுத்து கொண்டால் சீனாவை எதிரியாக நினைக்கிறது. இதனால் இந்தியாவை வைத்து சீனாவை சீண்ட நினைத்தது. ஆனால் இப்போது டிரம்பின் வரியால் நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. இது டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி இனி வரும் நாட்களில் இந்தியாவும், சீனாவும் சேர்ந்து செயல்படும் பட்சத்தில் டிரம்ப் சீண்டினால் இருநாடுகளும் சேர்ந்து பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது. இதனால் சீனா – இந்தியா உறவு வலுப்பெறுவது அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாகலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.