கோவை போளுவாம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே வனத்துறையினர்நேற்று ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது வனப்பகுதியில் ஒரு சிறுத்தை உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் மாவட்ட வனஅதிகாரி ஜெயராஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் முன்னிலையில் அந்த சிறுத்தையின் உடல் எரிக்கப்பட்டது. இறந்த சிறுத்தைக்கு 7 வயது இருக்கும். அது எப்படி உயிரிழந்தது ?என்பது தெரியவில்லை .இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை…வனத்துறையினர் விசாரணை.!!
