பி. ஏ.பி வாய்க்காலில் தவறி விழுந்து சென்ட்ரிங் தொழிலாளி பரிதாப பலி..

கோவை பேரூர் அருகே உள்ள தொண்டாமுத்தூர் பார்பர் காரனியைச் சேர்ந்தவர் சின்னராஜ் ( வயது 56 )சென்ட்ரிங் தொழிலாளி. இவர் செஞ்சேரி மலையில் தங்கி இருந்து கர்ணன் என்பவருடன் சேர்ந்து சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். நேற்று சுல்தான்பேட்டை ஆவின் மில்க் பின்புறம்உள்ள பிஏபி வாய்க்காலில் கால் கழுவுவதற்காக சென்றார்.அப்போது கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார் . நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார்.இது குறித்து சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.