கடைக்குள் புகுந்து150 கிலோ இரும்பு திருட்டு – சிசிடிவி கேமரா மூலம் கையும் களவுமாக சிக்கினார்.!!

கோவை அருகே உள்ள குறிச்சி ,பழனி போயர் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு ( வயது 59) இவர் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் பழைய இரும்பு – பேப்பர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் அவரது செல்போன் காமிரா மூலம் கடையை கவனித்தார். அப்போது கடையில் உள்ள சிசிடிவி கேமரா “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டு இருந்தது. இதை அறிந்து சந்தேகத்தின் பேரில் சுரேஷ் பாபு, தனது மகனுடன் கடைக்கு வந்தார் . அப்போது ஒருவர் கடையில் இருந்து இரும்புகளை திருடிக் கொண்டு ஒருவர் வெளியே வந்து கொண்டிருந்தார். அவரை சுரேஷ் பாபுவும், அவரது மகனும் சேர்ந்து கையும் களமாக பிடித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கரும்புக்கடை ,ஆசாத் நகரை சேர்ந்த ஆசிக் என்ற முகமது ஆசிக் ( வயது 26) என்பது தெரிய வந்தது. இவரிடமிருந்து 150 கிலோ இரும்பு கைப்பற்றப்பட்டது.