தங்ககையிருப்பு மூலமாக நீண்டகால ஆதிக்கத்தை நிலைநாட்டி உலகப் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள நாடுதான் அமெரிக்கா.
உலகப் பொருளாதாரத்தில் மேம்படுவதற்காக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேஸ் ஆகிய நாடுகள் தங்க கையிருப்புகளை அதிகரித்து வருகின்றனர். உலக அளவில் செல்வாக்கை மேம்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா சுமார் 8133 டன் தங்கங்களை வைத்துக்கொண்டு உலக நாடுகளில் தலைவன் பதவியில் உள்ளது. அமெரிக்காவின் நிதி அமைப்புகளின் மூலதனமே தங்க கையிருப்புத் தான்.
சுமார் 3351 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்துக்கொண்டு ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பியாவில் நெருக்கடி ஏற்பட்டபோது இந்த தங்க கையிருப்பு தான் கிரேக்கர்களுக்கும் போர்ச்சுகளுக்கும் உதவியாக இருந்துள்ளது. சுமார் 2452 டன் தங்க கையிருப்பை வைத்துக்கொண்டு பிரான்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. யூரோவின் மதிப்பை பாதுகாக்கவும் மற்றும் செல்வாக்கு குறையாமல் இருக்க ஐரோப்பா தங்க கையிருப்புகளை பத்திரப்படுத்தி வருகிறது.
சுமார் 2,451 டன் தங்கத்தை வைத்துள்ளது இத்தாலி, ரஷ்யா 2,333 டன் தங்கத்தை வைத்துள்ளது, சீனா 2292 தங்க டன்களை வைத்துள்ளது, சுவிட்சர்லாந்திடம் சுமார் 1040 தங்க டன்கள் வைத்துள்ளது. இந்தியா 880 டன் தங்கத்தை வைத்துள்ளது. என்னதான் இந்தியா தங்க இருப்புகளில் பின் தங்கி இருந்தாலும், நகைப்பிரியார்களால் நிரம்பிய நம் இந்தியா வீடுகளில் மட்டுமே சுமார் 25 ஆயிரம் டன் தங்கத்தை ஒழித்து வைத்துள்ளனர். இது இந்திய தேசத்தின் மிகப்பெரிய சக்தியாகக் கருதப்படுகிறது.