கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை சுமார் 7.20 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உடனடியாக கோவை மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

தகவல் கிடைக்கப்பெற்றதும் கோவை மாநகர போலீசார் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரைந்து வந்து வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்

மேலும் பி டி டி எஸ் என்று சொல்லக்கூடிய வெடிகுண்டு பரிசோதனை நிபுணர் குழுவினர் மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது