போதை மாத்திரை, கஞ்சா விற்பனை – 2 பேர் கைது..!

கோவை :சாய்பாபா காலனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தீபா நேற்றுவடகோவை மேம்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தே படும் படி நின்று கொண்டு இருந்து இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா 20 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் வேலாண்டிபாளையம், மருது கோனார் வீதியை சேர்ந்த மனோஜ் குமார் ( வயது 25) கோவில் மேடு வ .உ. சி வீதியைச் சேர்ந்த சகாய விஜய் (வயது 29) என்பது தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.