கோவை மாவட்ட காவல்துறையினர். சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலாம்பூர் பகுதியில் சூலூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் விற்பனைக்கு கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சவரம் மகன் கேவாரம்(வயது 34) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 421 கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா ) மற்றும் இதை கடத்துவதற்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
காரில் 421 கிலோ குட்கா கடத்தல் – வடமாநில வியாபாரி கைது..!
