சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து..!

கோவை மாவட்டம்,காரமடை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது63). இவர் காரமடை தண்ணீர் பந்தல் பகுதியில்  பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
இன்று காரில் அவரது கடைக்கு சென்று விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக தனது காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். அப்போது, காரமடை மேம்பாலத்தின் அருகே திடீரென  காரின் இன்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. உடனடியாக காரை நிறுத்திய வாசுதேவன் கீழே இறங்கி உள்ளார். அதற்குள்  காரின் முன் பகுதியில் இருந்து தீ ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.இதனால் அதிர்ச்சி அடைந்த வாசுதேவன் மற்றும் அங்கு இருந்தவர்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காரமடை போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் பாலகணேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கார் இன்ஜினில் இருந்த வயரிங் பழுது காரணமாக கார் தீப்பற்றி இருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது.