ராமநாதபுரம், மருதூர் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் செந்தில் குமார் தூங்கிக் கொண்டு இருந்தார். அதிகாலை 4 மணிக்கு கதவை சிலர் தட்டும் சத்தம் கேட்டது. இதனால் தூக்கத்திலிருந்து விழித்த செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவரை வெளியில் நின்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வா என்று மிரட்டி உள்ளனர்.
அதன் பிறகு செந்தில்குமார் கதவை திறந்து வெளியில் சென்ற போது 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் . இது குறித்து செந்தில்குமார் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் 5 பேர் மீது சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் வீட்டின் கதவை தட்டி மிரட்டிய மர்ம கும்பல்.!!
