பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு.!!

கோவை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மோட்டார் அறை உள்ளது. அதற்குள் மலைப்பாம்பு ஒன்று நேற்று பதுங்கி இருந்தது .இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் .பின்னர் அவர்கள் அங்கு பதுங்கி இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு முட்டையில் அடைத்தனர். அந்த பாம்பை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- பிடிபட்டது 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு. இது 15 கிலோ எடை கொண்டது. இந்த பாம்பு உணவு தேடி வந்த போது மோட்டார் அறைக்குள் பதுங்கிக் கொண்டது. அதை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டு விட்டோம் என்றனர்.