மாஸ்டர் பிளான் போட்ட தளபதி!! ரணகளமாக போகுது அரசியல் களம்… இதுவரை இல்லாத அளவு மாஸ் ஏற்பாடு செய்த விஜய்..!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது.

மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது.

குறிப்பாக இந்த மாநாட்டில எந்த ஒரு மாநாட்டிலும் இல்லாத அளவிற்கு சிறப்பான விஷயம் செய்யப்பட்டுள்ளது. மாநாடு என்றாலே, பல லட்சம் மக்கள் வந்து ஒன்று கூடக்கூடிய இடமாக இருக்கும். குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். அந்த நேரத்தில தொண்டர்களுக்கு அதிக தண்ணீர் தாகம் ஏற்பட்டால், வெகு தொலைவிற்குச் சென்று தண்ணீர் குடிக்க வேண்டி வரும். சில சமயங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால் கடந்த முறை விக்கிரவாண்டி மாநாட்டில் ஏற்பட்டது போல் மதுரை மாநாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதில் விஜய் முன்னெச்சரிக்கையாக உள்ளார்.

இந்த மாநாட்டி; தண்ணீர் தட்டுப்பாடு இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஒரு புதிய திட்டத்தை வந்து கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாகமிகப்பெரிய ஒரு ஆர்ஓ பிளான்ட்ல மூலமாக அங்கிருந்து நேரடியாக ராட்சத தொட்டியில் தண்ணீர்கள் நிரப்பப்பட்டு, காலை முதல் இரவு வரை தொண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு திடலில் மொத்தம் 90 பாக்ஸ்கள் அமைக்கப்படவுள்ளன. அங்கு தொண்டர்கள் கூடியுள்ள இடத்திற்கே தண்ணீர் விநியோகம் செய்யும் படி 10, 000 அடிக்கு பூமிக்கு அடியில் பைப்புகள் பொருத்தப்பட்டு, 750 குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படவுள்ளது. இந்த குழாய்கள் மூலமாக தொண்டர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தண்ணீர் அருந்தலாம், குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படாது.

இந்த ஏற்பாடு இதுவரை எந்தவொரு மாநாட்டிலும் செய்யப்படாத சிறப்பு ஏற்பாடாக பார்க்கப்படுகிறது. மாநாட்டு திடலுக்கு வெளியிலும், 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிண்டக்ஸ் டேங்க் மூலமாக 200க்கும் மேற்பட்ட தொட்டிகள் வைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. கடந்த முறை விக்கிரவாண்டி மாநாட்டில் தொண்டர்களுக்கு ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு தவெக தலைவர் விஜய் புதுமையான விதத்தில் தீர்வு கண்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது.