2 வீடுகளில் பூட்டை உடைத்து 26 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருள் திருட்டு..!

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, அண்ணாமலை நகர் 2வது விதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விக்னேஷ் சந்திரன் ( வயது 35 )இவர் கடந்த 16-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் குன்னூர் சென்றிருந்தார். நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து விக்னேஷ் சந்திரன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதே போல போத்தனூர் பக்கம் உள்ள வெள்ளலூர், திருவாதிரை நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 42) இவர் கடந்த 15 ‘ ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தஞ்சாவூர் சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 3 பவுன் தங்கச் செயின், 3 பவுன் தங்க வளையல்கள் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து மணிவண்ணன் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்கையர்களை தேடி வருகிறார்கள்..