கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி நேற்று மதியம் 1 – 40 மணிக்கு மெமு ரயில் வந்து கொண்டிருந்தது. அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது 2வயது குழந்தை தேவ அதிரனுடன் வந்து கொண்டிருந்தார். ரயில் காரமடை அருகே வந்து கொண்டிருந்தபோது அந்தப் பெண் தனது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்தார். அந்த குழந்தை மிட்டாயை வாயில் போட்டு கடிக்க முயன்ற போது திடீரென்று தொண்டை குழிக்குள் போய் சிக்கிக் கொண்டது .இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வடியத் தொடங்கியது. இதனால் குழந்தை துடித்தது அதை பார்த்து குழந்தையின் தாய் மற்றும் ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமும் ,அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த ரயிலில் பாதுகாப்புக்காக இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் குமார் ,சப் இன்ஸ்பெக்டர் சாஜினி ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் குழந்தையின்முதுகில் மெதுவாக தட்டி கொடுத்தனர். இதனால் சிறிது நேரத்தில் குழந்தையின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் வாயிலிருந்து வெளியில் வந்து விழுந்தது .இதை யடுத்து குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பி மூச்சுவிட தொடங்கியது அதை பார்த்து குழந்தையின் தாய் மற்றும் அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து கோவை வந்ததும் அந்த குழந்தையை அரசு மருத்துவமனைக்கு குழந்தைகள் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது அதன் பிறகு குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. சமோசிதமாகவும், விரைவாகவும் செயல்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் குமார்,சப் இன்ஸ்பெக்டர் சாஜினி ஆகியோரை ரயில் பணிகளும் பொதுமக்களும் பெரிதும் பாராட்டினார்கள். போலீசாருக்கு குழந்தையின் தாய் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
ஓடும் ரயிலில் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு குவியும் பாராட்டு.!!
