மானியத்துடன் ரூ.1 கோடி கடன் திட்டம் – இன்று முதல் அமல்.!!

தமிழக அரசு ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என அனைவருக்கும் தனித்தனி சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் சிறப்பு ஊக்கத்தொகைகளையும் வழங்கி வருகின்றது.

அவ்வகையில் முன்னாள் ராணுவ வீரர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்துடன் “முதல்வரின் காக்கும் கரங்கள்”திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 30 சதவீதம் மானியத்துடன் ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன் பெற முடியும். இந்தத் திட்டத்தில் பயன்பெற www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் வகையில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.