மேடையிலிருந்து ஆவேசமாக குதித்து தொண்டருக்கு பளார் விட்ட சீமான்… நாம் தமிழர் கூட்டத்தில் நடந்தது என்ன.!!

விழுப்புரத்தில் நேற்று நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான் கோபமாக சென்று கீழே இருந்தவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய சின்னமான செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது சத்ரபதி சிவாஜி மன்னரின் கோட்டை என குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் செஞ்சிக்கோட்டை தமிழ் மன்னர் ஆனந்தக் கோணுக்கு சொந்தமானது என வலியுறுத்தி நேற்று நாம் தமிழர் கட்சி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை சீமானின் பவுன்ஸர்கள் உள்ளே அனுமதிக்காததால் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

அதை மேடையிலிருந்து பார்த்த சீமான் திடீரென ஆவேசமாக கீழே குதித்து சென்று பாய்ந்தார். அவரை தடுக்க முயன்ற சொந்த கட்சி தொண்டரையும் பளார் என அறைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை சமாதானம் செய்து மேடை ஏற்றினர்.