நீலகிரி மாவட்ட முதல் கத்தோலிக்க பேராலயமான தூய மோட்சராக்கினி அன்னை பேராலயத்தின் 187 வது ஆண்டு விழா 15 ஆம் தேதி சிறப்பிக்கபட்டது.அன்னை மரியா விண்ணகம் சென்ற நாள் , பங்கு திருவிழா மற்றும் நாட்டின் 79 வது சுதந்திர விழா என்று முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது .கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு விழா துவங்கியது .பதினோரு நாள் தொடர்ந்து தினமும் மாலை சிறப்பு ஜெபமாலை ,நவநாள் , திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தப்பட்டன, இந்நிகழ்வில் பங்கு மக்கள் மற்றும் நீலகிரி பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்தனர், அன்னை மரியா விண்ணகம் சென்ற நாள் உலகம் முழுவதும் நினைவு கூறி கொண்டாடப்படும்
15 ஆம் தேதி காலை 6.15 மணிக்கு முதல் திருவிழா திருப்பலியை பங்கு குரு பெனடிக்ட் , மறைமாவட்ட ஆன்ம குரு ஞானதாஸ் மற்றும் உதவி பங்கு குரு டினோ பிராங்க் சிறப்பித்தனர் .
7.15 மணிக்கு ஆங்கில திருப்பலியை ஆயர் செயலர் இம்மானுவேல் அந்தோணி சிறப்பித்தார் .
9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து நாட்டின் 79 சுதந்திர விழாவை பற்றியும் சுதந்திரத்திற்காக தியாகம் செய்த உள்ளங்களை நாம் மறக்க கூடாது .நாட்டிற்காக அனைவரும் அன்னையிடம் பிராத்திப்போம் என்று கூறினார் .
முன்னதாக முதன்மை குருவுக்கும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்த குருக்களை ஆலயத்தின் பேண்ட் குழுவினர் ஆல்ட்ரின் , அனிதா மற்றும் பிராங்க் தலைமையில் ஐம்பது மாணவ மாணவிகள் இசைத்து வரவேற்றனர் .
திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்திரு .கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் குருக்கள் ஹென்றி ராபர்ட் , சுவக்கின் , குருமட அதிபர் அருள்சாமி , மறைமாவட்ட பொருளாளர் ஸ்டீபன் லாசர் , நிக்கோலாஸ் , தமிழ்மாறன் மற்றும் பங்கு குருக்கள் இணைந்து நிறைவேற்றினார்கள் .
பத்தாம் பத்திநாதர் குரு மட மாணவர்கள் பதிமூன்று பேர் கலந்து கொண்டனர் .
திருப்பலிக்கு பின் செயின்ட் மேரிஸ் இளைஞர் ஒன்றிய குழுவினர் அன்பின் விருந்து வழங்கினார்கள் .
மதியம் 3 மணிக்கு புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு சிஜோ ஜார்ஜ் எடக்குடியில் மலையாளத்தில் திருப்பலி நிறைவேற்றினார் .
மாலை 5 மணிக்கு சேசு சபை குரு ரிச்சர்ட் தலைமையில் மண்ணின் மைந்தர்களான குருக்கள் வில்லியம் , ஜான்சன் , பிரான்சிஸ் , பென்னி சிறப்பித்தனர் .
கிருஷ்ணன் ரோசலின் குடும்பத்தார் தயாரித்த தங்க ரதம் சப்பரத்தில் விண்ணேற்பு அன்னையின் ஆடம்பர தேர் பவனி ஆலயத்தில் துவங்கி மெர்சல் ஜங்ஷன் பகுதி, குட் ஷெட், ரயில் நிலையம், பஸ் நிலையம் வரை ஊர்வலமாக பிரார்த்தனைகளோடு கொட்டும் மழை எனும் பாராமல் மாதாவின் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், இந்தத் தேர் பவனி பஸ் நிலையம் வந்து மீண்டும் ஆலயம் திரும்பியது, .
வழி தோறும் அனைத்து மத பக்தர்கள் மற்றும் ஓட்டுனர்கள் குழுக்கள் அன்னைக்கு வரவேற்பு கொடுத்தனர் .
ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தது .
ஆலய பீடத்தை மலர்களால் மேத்தியூஸ் குடும்பத்தார் அலங்கரித்தனர் .
கடந்த முப்பது வருடமாக தொடர்ந்து அன்னையின் அற்புது சுரூபத்திற்கு கிங்ஸ்லி பிரிட்டோ சிகப்பு ரோஜா மாலையை அணிவித்து வருவது குறிப்பிடத்தக்கது .
அனைத்து ஏற்பாடுகள் பங்கு குரு பெனடிக்ட் , ஞானதாஸ் , டினோ பிராங்க் , வேதியர் நாதன் , பியோஜெரால்டு ஜோ , பங்கு பேரவை குழு மற்றும் இளைஞர் குழு செய்திருந்தனர், நடைபெற்ற அன்னையின் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிமாநிலத்தவர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்து சென்றனர், மற்றும் நடைபெற்ற இந்தத் தேர் பவணியில் கொட்டும் மழை கடுமையான குளிரினும் பாராமல் பங்கு குருக்கள் பங்கு மக்கள், சிறு குழந்தைகள், இளைஞர்கள் வயது முதியோர்கள், சுற்றுலாப் பயணிகள், பல்வேறு சங்கத்தினர்கள், சாலை முழுவதிலும் வரவேற்புகளும், மக்களுக்கு தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ் போன்ற உணவுகள் வழங்கி அன்னையின் திருவிழாவை சிறப்பாக கொண்டாடி அன்னையின் ஆசிர்வாத்தை பெற்றுக் கொண்டனர், திருவிழாவின் தேறு பவனி நிறைவாக திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்துடன் தூய மோட்ச ராக்கினி அன்னையின் 187 ஆவது ஆண்டு விழா நிறைவு பெற்றது
தூய மோட்சராக்கினி பேராலய 187 வது ஆண்டு விழா- கொட்டும் மழையிலும் சிறப்பு தேர் பவனில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.!!
